Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, 27 August 2024

Sweet Revenge: ரூ.70 லட்சம்; 2 மணி நேரம் எண்ணிய கடை ஊழியர்கள்; இறுதியில் ட்விஸ்ட் வைத்த பெண் | Viral

சீனாவின் சோங்கிங் பகுதியில் `ஸ்டார்லைட் ப்ளேஸ்' ஷாப்பிங் சென்டர் இருக்கிறது. இந்த ஷாப்பிங் சென்டரில் ஒருவர் தன் நண்பர்களுடன் 6,00,000 யுவான் (ரூ.70 லட்சத்திற்கு மேல்) ரொக்கமாகப் பணம் செலுத்தி, பொருள்களை வாங்கியிருக்கிறார். அந்தப் பணத்தை கடை ஊழியர்கள் சுமார் 2 மணி நேரமாக எண்ணி முடித்திருக்கிறார்கள். அவர்கள் முழு பணத்தையும் எண்ணி முடித்ததும், அந்தப் பெண், பொருள்வாங்கும் எண்ணம் மாறிவிட்டதாகக் கூறி, அந்தப் பணத்தை திரும்பப் பெற்றிருக்கிறார். இது அந்தக் கடைக்காரர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.சீன யுவான்

இது தொடர்பாக அந்தப் பெண், சமூக வலைதளத்தில் எழுதியிருக்கிறார். அதில், ``இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் அந்தக் கடைக்குச் சென்றிருக்கிறேன். அப்போது அந்தக் கடையில் இருந்த ஊழியர்கள் மரியாதையாக நடந்து கொள்ளவில்லை. தண்ணீர் கேட்டதற்குக்கூட தராமல், காலாவதியான பொருள்களைக் காண்பித்து அவமரியாதையாக நடந்து கொண்டார்கள். இது தொடர்பாக மேலாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

எனவே, இதற்குப் பழிவாங்கும் விதமாகவே இது போன்று நடந்துகொண்டேன். இறுதியில், அந்தக் கடை உரிமையாளரைச் சந்தித்துப் பேசியிருந்தேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பெண்ணின் பழிவாங்கும் சதி இணையத்தில் பெரும் விவாதமானது. அதே கடையில் மோசமான அனுபவம் பெற்ற ஒரு பயனர், "இந்த ஆண்டின் மிகவும் திருப்திகரமான பழிவாங்கல்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்... பாராட்டிய ஜோ பைடன் - அமைதி திரும்பும் நடவடிக்கைக்கு உறுதி!


http://dlvr.it/TCQlb7

Thursday, 22 August 2024

1 Hard drive-ல் 13,000 நிர்வாண வீடியோக்கள்; US-ல் கைதான இந்திய மருத்துவர் - `பகீர்' குற்றப் பின்னணி!

அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தின் ஓக்லாண்ட் கவுன்ட்டியில் மருத்துவராகப் பணியாற்றி வந்தவர் ஏஜாஸ் (40). இந்திய குடிமகனான இவர், 2011-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர்மீது பாலியல் தொல்லை ரீதியான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் அடிப்படையில், காவல்துறை விசாரணையை தொடங்கியது. அதில்தான் பல அதிர்ச்சிகர செய்திகள் வெளியாகியிருக்கின்றன.ரகசிய கேமரா

இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான ஏஜாஸ், நீச்சல் குளத்தில் உடை மாற்றும் அறைகள், குளியலறைகள், மருத்துவமனை அறைகள், அலமாரிகள், படுக்கையறைகள், அவரால் இலகுவாக அணுகக்கூடிய குடியிருப்புகளுக்குள் உள்ள குளியலறைகள் ஆகிய பல்வேறு இடங்களில் ரகசிய கேமராக்களை பொருத்தியிருக்கிறார். அதன் மூலம் 2 வயது சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரின் நிர்வணப் புகைப்படங்களையும் சேகரித்திருக்கிறார்.

இது தொடர்பாக விசாரணைய தீவிரப்படுத்திய காவல்துறை, இவர்மீது குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது, மருத்துவமனையில் நோயாளி ஒருவரிடம் அத்துமீறியது, நிர்வாணப் படங்களை சேகரித்து வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு பதிந்து, அவரைக் கைதுசெய்திருக்கிறது. ஆறு கம்ப்யூட்டர்கள், நான்கு செல்போன்கள், 15 ஹார்டு டிரைவ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர்.மருத்துவர் ஏஜாஸ்

ஒரு ஹார்ட் டிரைவில் மட்டும் 13,000 வீடியோக்கள் இருந்ததாக காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது. மேலும், இந்தச் சாதனங்களில் உள்ள அனைத்தையும், சாத்தியமான கிளவுட் சேமிப்பகத்தையும் ஆய்வாளர்கள் பரிசோதனை செய்துவருகின்றனர். மேலும், இந்த வீடியோக்கள் மற்றவர்களுக்கும் பரப்பப்பட்டதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, மருத்துவரின் இந்தக் குற்றச் செயல் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.TVK Vijay: `இதுவரை நமக்காக உழைத்தோம், இனி...' - தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுக விழாவில் விஜய் உரை


http://dlvr.it/TCF4zS

Tuesday, 20 August 2024

`78 வயதான கோடீஸ்வரர் ஒருவர், கமலா ஹாரிஸிடம் தோற்றுவிடுவோமோ என்று பயப்படுவதால்..!" - ஒபாமா உரை

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. ஜோ பைடன், கமலா ஹாரிஸை அடுத்த அதிபர் வேட்பாளாராக முன்னிறுத்தியதிலிருந்து, அவருக்கான ஆதரவும் அதிகரித்து வருகிறது. அதே நேரம், கமலா ஹாரிஸை எதிர்த்து களமிறங்கியிருக்கும் டொனால்ட் ட்ரம்பும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

இந்த நிலையில், ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, ``புதிய அத்தியாயத்துக்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது. அதிபர் தேர்தல் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸிடம் கட்சியின் ஜோதி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜனநாயகக் கட்சியினருக்கான வேலை இன்னும் முடியவில்லை.கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தல் மிகவும் கடுமையான போட்டியாக இருக்கும். கடந்த சில வாரங்களாக நம்மால் உருவாக்க முடியாத அளவிலான ஆற்றலை பேரணிகள், பிரசாரங்களுக்காக உருவாக்கியிருக்கிறோம். ஆதனால் தேர்தல் இறுக்கமாக நடக்கலாம். கமலா ஹாரிஸ் வங்கிகளையும், குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களையும் தொடர்ந்து கண்காணித்து பின்தொடர்ந்தார். வீட்டு அடமான நெருக்கடியில் சிக்கிய வீட்டு உரிமையாளர்களுக்கு, நியாயமான தீர்வு கிடைப்பதை உறுதிசெய்ய என்னையும் எனது நிர்வாகத்தையும் மிகவும் கடினமாக செயல்படத் தூண்டினார்.

அதனால், கமலா ஹாரிஸ் மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்துவார் என நம்புகிறோம். தன் சொந்த வாக்காளர்களை மட்டும் திருப்திபடுத்த முயலமாட்டார். தனக்கு கட்டுப்பட மறுப்பவர்களை தண்டிக்கமாட்டார். எனவே, அமெரிக்காவின் எதிர்காலத்துக்காக வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன். அதிபர் தேர்தலில் போட்டியிடும் 78 வயதான கோடீஸ்வரர் ஒருவர், கமலா ஹாரிஸிடம் தோற்றுவிடுவோமோ என்று பயப்படுவதால், அவரின் பிரசார களம் உண்மையில் மோசமாகி வருகிறது.ஜோ பைடன் - கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை எனது நண்பர் என்று அழைப்பதில் பெருமையடைகிறேன். அரசியலில் மிக முக்கியமான காரியத்தைச் செய்வதில் தன்னலமற்றவர். நாட்டின் நலனுக்காக தனது சொந்த லட்சியத்தை ஒதுக்கி வைப்பவர். பெரும் ஆபத்து நேரத்தில், ஜனநாயகத்தை பாதுகாத்த ஒரு தலைசிறந்த ஜனாதிபதியாக ஜோ பைடனை வரலாறு நினைவு கூறும். அவரை எனது ஜனாதிபதி என்று அழைப்பதிலும், என் நண்பர் என அழைப்பதிலும் நான் பெருமைப்படுகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88`இளம் பெண்கள் பாலியல் விருப்பங்களை அடக்க வேண்டும்’ - உயர் நீதிமன்ற கருத்தை நீக்கிய உச்ச நீதிமன்றம்


http://dlvr.it/TC9jL6

US Democratic Event: `ஜோ, உங்களின் தலைமைக்கும் சேவைக்கும் நன்றி...' - பைடனிடம் கூறிய கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவில் இன்னும் மூன்று மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதேசமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், அவரின் சமீபகால உடல்நல தளர்வு, ஊடக நேர்காணல்களில் உளறுவது போன்ற செயல்கள் விமர்சனத்துக்குள்ளாகவே, துணை அதிபர் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.ஜோ பைடன்

கமலா ஹாரிஸ் Vs ட்ரம்ப் என்ற தேர்தல் களம் சூழலில், கமலா ஹாரிஸ் வெற்றிபெற்று அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபர் என்ற சாதனை படைப்பார் என ஆளும் ஜனநாயக கட்சியினர் நம்புகின்றனர். இந்த நிலையில், நாட்டுக்குப் பணியாற்றியதற்காக பைடனுக்கு கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்திருக்கிறார்.

சிகாகோவில் நேற்று தொடங்கிய ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் முதல்நாளில் உரையாற்றிய கமலா ஹாரிஸ், ``உங்களின் வரலாற்றுத் தலைமைக்கு நன்றி ஜோ. வாழ்நாள் முழுவதும் நம் நாட்டுக்கு சேவை செய்ததற்காக என்றென்றும் உங்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.கமலா ஹாரிஸ்

நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் இங்கு வந்திருக்கிறோம். நவம்பரிலும் நாம் ஒன்று கூடுவோம் நாங்கள் முன்னேறி வருகிறோம் என்பதை ஒரே குரலில் அறிவிப்போம். போராடும்போது வெற்றி பெறுவோம் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்" என்றார்.கமலா ஹாரிஸ்

வழக்கமாக இது போன்ற தேசிய மாநாட்டில் அதிபர் வேட்பாளர்கள் கடைசி நாளில் உரையாற்றுவார்கள் என்ற சூழலில், வழக்கத்துக்கு மாறாக கமலா ஹாரிஸ் இவ்வாறு உரையாற்றியது மக்களிடமிருந்து பெரும் ஆரவாரத்தைப் பெற்றது. இந்த மாநாடு ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.US Election: `எலான் மஸ்க்குக்கு அமைச்சர் பதவியா..!' - க்ரீன் சிக்னல் காட்டிய ட்ரம்ப்!


http://dlvr.it/TC81Jp

Monday, 19 August 2024

ஒலிம்பிக் பதக்கம் வென்ற கையோடு உணவக வேலைக்குத் திரும்பிய வீராங்கனை! என்ன காரணம்?

சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோ யாக், நாடு திரும்பியதும் மீண்டும் தனது உணவகப் பணியைத் தொடர்கிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. எப்போதும் போல தடகள போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி பதக்கப் பட்டியலில் முன்னிலை வகிக்கும் சீனா, இம்முறை 2வது இடத்தைப் பெற்றது. அந்த நாடு 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களை அள்ளியது. சீன வீராங்கனை சோ யாக்Doctor Vikatan: கால்வலியைப் போக்குமா MCR செருப்புகள்?

சீனாவைச் சேர்ந்த 18 வயதே நிரம்பிய வீராங்கனை சோ யாக் (Zhou Yaqin), ஜிம்னாஸ்டிக்ஸில் பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பதக்கம் அணிவிப்பு நிகழ்வின்போது போடியத்தில் அதே பிரிவில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற இத்தாலி வீராங்கனைகள் பதக்கத்தைக் கடித்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க, அதைப் பார்த்து அழகான ரியாக்‌ஷன் கொடுத்திருந்தார் சோ யாக். அந்தக் காட்சிகள் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. சீன வீராங்கனையின் புன்னகையை பலரும் ரசித்து பாராட்டினர்.

இந்த நிலையில், வெள்ளிப் பதக்கத்துடன் நாடு திரும்பிய பின்னர் சோ யாக் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறார்.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரில், வீராங்கனை சோ யாக்கின் பெற்றோர் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். அந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு சோ யாக் உணவு பரிமாறும் காட்சி வெளியாகி இருக்கிறது. ஒலிம்பிக் ஜெர்சியை அணிந்தபடி வாடிக்கையாளர்களுக்கு அவர் உணவு பரிமாறி வருகிறார். தங்கள் குடும்பத்தின் உணவகத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில் அவர் இதனைச் செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக X சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் வீடியோவை பகிர்ந்துள்ளார். அத்துடன், "அழகான இந்த சீன ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சோ யாக்கினை நினைவிருக்கிறதா? ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு, விடுமுறைக்காக தன் பெற்றோர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். நிச்சயமாக, நீங்கள் அதை விடுமுறை என்று அழைக்க முடியாது. ஏனென்றால் அவர் தன் பெற்றோர் நடத்தும் உணவகத்தில் வேலை செய்ய உதவுகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பயனர் ஒருவர், "யாகின் தனது ஒலிம்பிக் வெற்றியை குடும்பப் பொறுப்புகளுடன் சமநிலைப்படுத்துவதைப் பார்ப்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. அவர் மிகவும் பணிவானவர்!" என்று புகழ்ந்துள்ளார். 1 மாடித்தோட்ட கிட் 450 ரூபாய்... விற்பனையைத் தொடங்கிய தோட்டக்கலைத்துறை! பெறுவது எப்படி?

மற்றொருவர், "கடினமாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றும் உன்னதமான ஒரு வேலை. இதற்காக அந்த வீராங்கனை பெருமைப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னொருவர், " இதை நம்ப முடியவில்லை. அப்பெண் மிகவும் அடக்கமானவர். நான் சாப்பிடச் செல்லும் சீன உணவகங்களில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் நிறைய குழந்தைகள் தங்கள் பெற்றோர்/குடும்பத்திற்கு உதவுவதை நான் காண்கிறேன்" என்கிறார்.

ஆனால், "விளையாட்டு உடை அணிந்து உணவு பரிமாறுவதன் மூலம் இது ஒரு சிறந்த சந்தைப்படுத்தல் உத்தி" என்ற கருத்தையும் சிலர் முன்வைக்கிறார்கள்.

Remember that cute Chinese gymnast Zhou Yaqin?
After winning the Olympic silver medal, she has returned to her parents' home for a vacation.
Of course, you can't call it a vacation.
Because she needs to help work in the restaurant run by her parents.pic.twitter.com/MNy7rHLvh2 pic.twitter.com/r15StYuJTO— ShanghaiPanda (@thinking_panda) August 13, 2024


http://dlvr.it/TC7LTB

USA: பிரமாண்ட அரங்கம்; உற்சாக கமலா ஹாரிஸ்; அசத்தல் ஹிலாரி - தொடங்கியது ஜனநாயக கட்சியின் மாநாடு!

கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடு | பைடன்ஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்ஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடுஜனநாயக கட்சியின் மாநாடு | ஹிலாரி கிளின்டன்ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு ஜனநாயக கட்சியின் மாநாடு | கமலா ஹாரிஸ்கமலா ஹாரிஸ்


http://dlvr.it/TC76yP

Thursday, 15 August 2024

குழந்தை திருமணம்: 2000ம் ஆண்டு முதல் 3,00,000 வழக்குகள்; 37 மாகாணங்களில் இன்னும்..! - அமெரிக்கா ஷாக்

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஆப்பிரிக்கா கண்டத்தின் பல நாடுகளிலும் குழந்தை திருமணம் பெரும் சிக்கலாக தொடர்கிறது. அது குறித்துதான் உலக நாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தப் பட்டியலில் 'வல்லரசு நாடு என அறியப்படும் அமெரிக்காவிலும், குழந்தைத் திருமணம் நடந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.குழந்தை திருமணம்

குழந்தை திருமணம் உலகின் பின்தங்கிய பகுதிகளில் மட்டுமே இருக்கும் பிரச்னை என்று பரவலாக நம்பப்பட்டாலும், அமெரிக்காவில் பெரும்பாலான மாகாணங்களில் குழந்தைத் திருமணங்கள் இன்னும் சட்டப்பூர்வமாக உள்ளது. அமெரிக்காவில் இருக்கும் Unchained At Last எனும் அமைப்பு நடத்திய ஆய்வு முடிவில், ``18 வயது பூர்த்தியடையும் முன்பு நடத்தப்படும் குழந்தை திருமணம், கட்டாய திருமணம் போன்றவை 2017-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் 50 மாகணங்களில் சட்டப்பூர்வமாக இருந்தது.

இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராக 2018-ம் ஆண்டு அமெரிக்கன் சமோவாவும், 2020-ல் அமெரிக்க விர்ஜின் தீவு, பென்சில்வேனியா, மினசோட்டா, 2021-ல் ரோட் தீவு, நியூயார்க், 2022-ல் மசாசூசெட்ஸ், வெர்மான்ட், கனெக்டிகட், மெச்சிகன் 2023-ல் வாஷிங்டன், 2024-ல் நியூ ஹாம்ப்ஷயர் ஆகிய பகுதிகளில் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. இருப்பினும், குழந்தை திருமணம் 37 மாகாணங்களில் சட்டப்பூர்வமாக உள்ளது.குழந்தை திருமணம்

2000-ம் ஆண்டு முதல் தற்போது வரை , அமெரிக்காவில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், உட்பட 300,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் நடந்திருக்கிறது. இன்னும் பல அமெரிக்க மாகாணங்ககளில் சட்டப்பூர்வமாக இருக்கும் குழந்தைத் திருமண அனுமதி சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக சிறுமிகள், அதிக பாலியல் வன்முறை சுரண்டல்களையும், சட்டரீதியான பொருளாதார சுரண்டலை எதிர்கொள்கின்றனர். டெக்சாஸ் மாகாணத்தில், 2000-2018 வரை அதிக எண்ணிக்கையிலான குழந்தை திருமணங்கள் (41,774) நடந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து கலிபோர்னியா, புளோரிடா, நெவாடா மற்றும் வட கரோலினா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் குழந்தை திருமணம் குறித்த இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88``சர்வாதிகாரத்தால் தேச பக்தியை எப்படி சிறையிலடைக்க முடியும்?" - சுனிதா கெஜ்ரிவால் காட்டம்


http://dlvr.it/TBy1Dh

Tuesday, 13 August 2024

US Elections: சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்; ட்ரம்பை தொடர்ந்து கமலாவை நேர்காணலுக்கு அழைத்த மஸ்க்!

இன்னும் மூன்று மாதங்களில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கான பிரசாரங்களில் இருவரும் ஒருவரையொருவர் சாடிவரும் அதேவேளையில், பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் உதவி ஆகியவற்றின் காரணமாக இருவருக்கெதிராகவும் கணிசமான மக்கள் குரலெழுப்பி வருகின்றனர்.எலான் மஸ்க் - டொனால்ட் ட்ரம்ப்

இவ்வாறிருக்க, X சமூக வளைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், டொனால்ட் ட்ரம்பை நேற்றிரவு X வலைதள ஸ்பேஸஸில் (X spaces) நேர்காணல் செய்திருந்தார். இதில் கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், அவர் ஒரு மூன்றாம் தர வேட்பாளர் என்றும், ஜோ பைடனை விடவும் திறமையற்றவர் என்றார்.

மறுபக்கம் இந்த நேர்காணலை கமலா ஹாரிஸின் பிரசார தரப்பான ஹாரிஸ்-வால்ஸ், ``ட்ரம்பின் முழு பிரசாரமும், எலான் மஸ்க் மற்றும் அவரைப்போன்ற பணக்காரர்களுக்கானது. ட்ரம்பை மீண்டும் அதிபராக்க உதவுவதற்காக மில்லியன் கணக்கான டாலர்களை நன்கொடையாக வழங்குவதாக எலான் மஸ்க் உறுதியளித்தது போதாது போல. அதனால், உலகின் மிகப்பெரிய சமூக ஊடகங்களில் ஒன்றான மற்றும் அவர் வாங்கிய சமூக வளைதளத்தை, ட்ரம்பின் வெறுக்கத்தக்க அஜெண்டாவை மில்லியன் கணக்கான பயனர்களுக்கு பரப்ப பயன்படுத்துகிறார்" என்று விமர்சித்தது.கமலா ஹாரிஸ்

இந்த நிலையில், தன்னுடைய X வலைதள ஸ்பேஸஸில் நேர்காணலில் கலந்துகொள்ள கமலா ஹாரிஸுக்கு எலான் மஸ்க் அழைப்பு விடுத்திருக்கிறார். இருப்பினும், கமலா ஹாரிஸ் இதில் இதில் கொள்வாரா என்பது சந்தேகம்தான் எனக் கூறப்படுகிறது. காரணம், கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக ஒரு நேர்காணலில்கூட அவர் கலந்துகொள்ளவில்லை.Musk - Trump Interview `ரஷ்ய, சீன, வட கொரிய அதிபர்கள் தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள்!' - ட்ரம்ப்


http://dlvr.it/TBsTvn

Musk - Trump Interview `ரஷ்ய, சீன, வட கொரிய அதிபர்கள் தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள்!' - ட்ரம்ப்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் முழுவீச்சில் நடந்துவருகிறது. ஜோ பைடன் தேர்தல் களத்திலிருந்து பின்வாங்கியதிலிருந்து, பிரசாரத்தின் வேகமும், வார்த்தைப் போர்களும் அதிகரித்திருக்கின்றன. கமலா ஹாரிஸுக்கு ஆதரவான சூழல் நிலவுவதாக கருத்துகணிப்பு முடிவுகள் வெளியானதிலிருந்து டொனால்ட் ட்ரம்ப், தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துவருகிறார். அதில் ஒன்றுதான் எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க்குடன் ட்ரம்ப் நடத்திய நேர்காணல்.பைடன் Vs ட்ரம்ப்?

இந்த நேர்காணலில், கமலா ஹாரிஸ், ஜோ பைடன் ஆகியோரின் நிர்வாக திறன் குறித்து, ட்ரம்ப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். நேர்காணலின் ஒருபகுதியில், ``ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் தங்கள் நாட்டின் சிறப்பான நிர்வாகத்தில் உச்சத்தில் இருக்கின்றனர். இந்த தலைவர்கள் சர்வாதிகாரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இதுவும் அந்த தலைவர்களின் அன்பின் வேறு வடிவம். அவர்கள் அனைவரும் தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள். எனவே, அவர்களை சமாளிக்கும்படியான வலுவான அதிபர் ஒருவர் அமெரிக்காவுக்கு தேவை.

ஜோ பைடன் தூங்கிக்கொண்டிருப்பவர். ஜோ பைடன் ஆட்சியில் இருந்திருக்காவிட்டால், ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமித்திருக்காது. நான் புதினுடன் நன்றாகப் பழகினேன். அவர் என்னை மதித்தார். நாங்கள் உக்ரைனைப் பற்றியும் பேசியிருக்கிறோம். உக்ரைன் புதினின் கண்ணின் மணி. உக்ரைன் மீது போர்தொடுக்க வேண்டாம் என நான் அவரிடம் கூறியிருக்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.Musk - Trump Interview: ``பைடன் தேர்தலிலிருந்து விலக்கப்பட்டது ஒரு சதி..!" - டொனால்ட் ட்ரம்ப்


http://dlvr.it/TBrm3p

Monday, 12 August 2024

Musk - Trump Interview: ``பைடன் தேர்தலிலிருந்து விலக்கப்பட்டது ஒரு சதி..!" - டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில், நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிபர் வேட்பாளாராக குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். ஜோ பைடன் வேட்பாளராக இருந்தபோது, ட்ரம்புக்கு ஆதரவு பெருகிய நிலையில், கமலா ஹாரிஸ் வேட்பாளாராக களம் இறங்கியபிறகு போட்டி சூடுபிடித்திருகிறது. இதற்கிடையில், ட்ரம்புக்கு ஆதரவை வெளிப்படுத்திய ஸ்பேஸ் எக்ஸ் தளத்தின் சிஇஓ எலான் மஸ்க், தன் எக்ஸ் பக்கத்தில் ட்ரம்பை நேர்காணல் செய்திருக்கிறார். இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணியளவில் தொடங்கிய இந்த நேர்காணலை சுமார் 1.2 பில்லியன் மக்கள் கேட்டுவருகின்றனர்.எலான் மஸ்க்

இதில், அவரிடம் அமெரிக்க பொருளாதாரம், நிர்வாகம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுவருகிறது. இந்த விவாதத்தின்போது ட்ரம்ப், ``மிக முக்கியமான விவாத நிகழ்ச்சியில், ஜோ பைடனுடனான விவாதத்தில் நான் அவரை மோசமாக தோற்கடித்தேன். அதனால்தான், சதி செய்யப்பட்டு அவர் தேர்தலிலிருந்து வெளியேற்றப்பட்டார். என்னை நோக்கி வந்த தோட்டாவை எனக்கு நன்கு தெரியும்... அப்படியிருந்தும் நான் உயிர்பிழைத்திருக்கிறேன். கடவுளை நம்பாதவர்கள் இனி இது குறித்து சிந்திக்க வேண்டும்.

அமெரிக்க பொருளாதாரம் பணவீக்கத்தால் ஒரு பேரழிவில் இருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் நிறைய பணத்தை சேமித்தனர். இன்று அவர்கள் தங்கள் பணத்தை சேமிக்க முடியாமல் முழுவதுமாக பயன்படுத்தி, கடன் வாங்கி செலவழிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து கமலா ஹாரிஸ் வெற்றிப்பெற்றால், நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்துக்கு சென்றுவிடும். நாம் இஸ்ரேலிடம் இருப்பதை போன்ற பாதுகாப்பு அம்சமான தாக்குதல்களை தடுக்கும் டோமை உருவாக்க வேண்டும்.டொனால்ட் ட்ரம்ப்

உலகிலேயே மிகச் சிறந்த அயர்ன் டோம்-ஐ நாம் வைத்திருக்கப் போகிறோம். நாட்டு மக்களின் பாதுகாப்பு முக்கியம். நான் அதிபராக இருந்தபோது, ​​ஈரான் உடைந்திருந்தது. அவர்களிடம் தீவிரவாதத்திற்கான பணம் இல்லை. அந்த நிலை தொடர்ந்திருந்தால் இஸ்ரேல் ஒருபோதும் தாக்கப்பட்டிருக்காது. தற்போது நம்மிடம் ஒரு குறைபாடுள்ள அரசு இருக்கிறது. ஒரு மாதத்தில் மில்லியன் கணக்கான அகதிகள் நாட்டுக்குள் வருகிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக கமலா ஹாரிஸ் நடிக்க முயற்சிக்கிறார். ஆனால், அவர்கள்தான் தொடர்ந்து மூன்றரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தனர். இன்னும் ஐந்து மாதங்கள் மீதமுள்ளன. ஆனால் அவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88Trump: `டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல இரான் சதி?' - உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்... அமெரிக்கா விளக்கம்!


http://dlvr.it/TBrTGz

Sunday, 11 August 2024

"வங்கதேசத்தை ஆட்சி செய்ய அமெரிக்காவை அனுமதித்திருந்தால்..!"- குற்றம்சாட்டிய ஷேக் ஹசீனா?!

வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு தொடர்பாக எதிர்கொண்ட சிக்கலால், கடந்த 5-ம் தேதி தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, வங்கதேசத்திலிருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன் பிறகு, 'ஏழை, எளியவரின் வங்கியாளர்' எனப் புகழப்படும், நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை, வங்கதேச குடியரசுத் தலைவர் ஆலோசனையின் அடிப்படையில் நிறுவப்பட்டிருக்கிறது. மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரை இந்த ஆட்சி தொடரும் என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது.ஷேக் ஹசீனா

ஆனாலும், தற்போதுவரை வங்கதேசத்தின் சில பகுதிகளில் வன்முறை நீடிப்பதாகவும் செய்திகள் தொடர்கின்றன. இதற்கிடையில், தன் ராஜினாமா குறித்து எதுவும் பேசாமல் இருந்த ஷேக் ஹசீனா முதல் முறையாக அதற்கான காரணத்தை விளக்கியிருப்பதாக ஒரு செய்தி பரவியது. இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியில், ``பிரதமர் பதவியை நான் ராஜினாமா செய்ததற்கான காரணம், மேலும் வன்முறை தொடரக்கூடாது, உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது என்பதுதான்.

மாணவர்களின் ஒரு பகுதியினர் இறந்த உடல்கள் மீது அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். எனவே, நான் ராஜினாமா செய்வதன் மூலம் அதைத் தடுத்தேன். மாணவர்களை தூண்டுவதற்காக எனது வார்த்தைகள் திரிக்கப்பட்டன. ஒருபோதும் போராட்டகாரர்களை ‘ரசாக்கர்கள்’ (1971 விடுதலைப் போரின் போது பாக்கிஸ்தான் இராணுவத்தின் ஒத்துழைப்பாளர்களாக நம்பப்பட்ட மக்களைக் குறிக்க "ரசாகர்கள்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது) என நான் குறிப்பிடவில்லை. தேசத்தை சீர்குலைக்க சதிகாரர்கள் உங்கள் அப்பாவித்தனத்தை எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அப்போது நான் பேசிய அன்றைய முழு வீடியோவைப் பாருங்கள். Sheik Hasina - ஷேக் ஹசீனா

வங்கதேசத்தை ஆட்சி செய்ய அமெரிக்காவை அனுமதித்திருந்தால், இந்நேரம் நான் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்கலாம். நீங்கள்தான் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள். அதனால் நான் உங்களுக்கு தலைமை தங்கினேன். எனக்கு அவ்வளவு பலமாக இருந்தீர்கள். தயவுசெய்து தீவிரவாதிகளின் சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என என் மண்ணின் மக்களிடம் மன்றாடுகிறேன்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத் தன் எக்ஸ் பக்கத்தில்,``சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியிடப்பட்ட எனது தாயாரின் ராஜினாமா அறிக்கை முற்றிலும் பொய்யானது, புனையப்பட்டது. வங்கதேசத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ அவர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பதை நான் அவரிடம் உறுதிப்படுத்தினேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88Hindenburg Report: `அடிப்படை ஆதாரமற்றவை...' - ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டும், SEBI தலைவர் மறுப்பும்!


http://dlvr.it/TBp1Ts

Wednesday, 7 August 2024

US Elections: `ஒருவேளை ட்ரம்ப் தோற்றால்...' - அதிகார மாற்றம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் (Joe Biden) முதலில் போட்டியிடுவதாக இருந்த நிலையில், அவரின் சமீபகால தடுமாற்றம் காரணமாக வேட்பாளர் பட்டியலிலிருந்து கட்சியால் விலக்கப்பட்டார்.Donald Trump - கமலா ஹாரிஸ்

அதையடுத்து, தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜோ பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மறுபுறம், கடந்த முறை அதிபர் தேர்தலில் தோற்ற குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் இந்தமுறை அதிபர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், ட்ரம்ப் தோற்றால் அதிகார மாற்றம் கமலா ஹாரிஸுக்கு அமைதியான முறையில் செல்ல வேண்டும் என பைடன் தெரிவித்திருக்கிறார். தனியார் ஊடகத்துடனான நேர்காணல் நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்த பைடன், ``தாங்கள் தோற்றால் ரத்தக் களரி ஏற்படும் என்பதற்கான அனைத்து விஷயங்களையும் அவர் (ட்ரம்ப்) அர்த்தப்படுத்துகிறார்.கமலா ஹாரிஸ் - ஜோ பைடன்

எனவே, எங்களுக்கு நம்பிக்கையில்லை, ட்ரம்ப் தோற்றால் அதிகார மாற்றம் அமைதியாக நிகழ வேண்டும்" என்று கூறினார். முன்னதாக, கடந்த முறை அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோற்றதையடுத்து பைடன் வெற்றிபெற்று அதிபராகப் பதவியேற்றபோது கலவரம் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.US Elections: டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ்... இந்தியாவுடனான அணுகுமுறை எப்படி?!


http://dlvr.it/TBdygl

ட்ரம்பை கொல்ல சதி: ``த்ரில்லர் படம் போல விரிவான சதித்திட்டம்..!" - பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கைது

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் தேர்தலை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் அதிஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். கொலை முயற்சியில் ஈடுபட்ட தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற இளைஞர் அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump)

இது தொடர்பாக குடியரசுக் கட்சி,`டொனால்ட் ட்ரம்புக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில் மெத்தனம் காட்டுகிறது' எனக் குற்றம்சாட்டியது. ஆனால் அமெரிக்க அரசு, ``ட்ரம்ப்பின் உயிருக்கு ஈரானால் அச்சுறுத்தல் இருப்பது குறித்து அமெரிக்க ரகசிய அமைப்பு தகவலளித்தது. அதனடிப்படையில், ட்ரம்ப்புக்கு எதிர் தாக்குதல் நடத்தும் பாதுகாப்பு பணியாளர்கள், ட்ரோன் கண்காணிப்பு, ரோபோ நாய்கள் ஆகியவை மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து புதிய அச்சுறுத்தல் தகவல்களால், தேவையான ஆதாரங்களை திரட்டி தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில்தான், டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிஃப் மெர்ச்சண்ட் என்பவரை அமெரிக்க ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ) அமைப்பு கைது செய்திருக்கிறது. இது தொடர்பாக எஃப்.பி.ஐ தலைவர் கிறிஸ்டோபர் வ்ரே, ``குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல உளவுத் திரில்லர் திரைப்படத்தைப் போன்ற விரிவான சதித்திட்டத்தில் ஒருவர் ஈடுபட்டிருக்கிறார்.ஆசிஃப் மெர்ச்சண்ட்

தற்போது அம்பலப்படுத்தப்பட்ட இந்த கொலை சதி, ஈரானுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ஒரு பாகிஸ்தானியரால் திட்டமிடப்பட்டது. 2020-ம் ஆண்டு ஈராக்கில், ஈரான் குட்ஸ் படையின் தளபதி காசிம் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் மூலம் படுகொலை செய்ய, அப்போதைய அதிபராக இருந்த ட்ரம்ப் உத்தரவிட்டதிலிருந்து, அமெரிக்கவின் அதிகாரிகளை கொன்று பதிலடி கொடுக்க வேண்டும் என ஈரான் திட்டமிட்டு வருகிறது. ஈரானின் இந்த இடைவிடாத முயற்சிகளை தீவிர நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் நடந்த கொலை முயற்சிக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை." எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88Yahya Sinwar: இஸ்மாயில் ஹனியே மரணம்; ஹமாஸின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் தேர்வு!


http://dlvr.it/TBc8Bg

Tuesday, 6 August 2024

August 6 Hiroshima day: மறக்குமா மனித இனம்... ஹிரோஷிமாவில் உலகின் முதல் அணுகுண்டு விழுந்த நாள்!

உலக வரலாற்றில் யாரும் மறக்க மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத உலகின் முதல் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நாள் இன்று. 1939-ல் தொடங்கிய இரண்டாம் உலகப் போர், 1945-ல் முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த நேரம் அது. ஆனால் , இடைப்பட்ட இந்த ஆறாண்டு காலமும், அச்சு நாடுகள் அணியில் இடம்பெற்றிருந்த ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளும், நேச நாடுகள் அணியில் இடம்பெற்றிருந்த பிரிட்டன், பிரான்ஸ், போலந்து ஆகிய நாடுகளுக்கும் கடுமையான போர் நடைபெற்றது.இரண்டாம் உலகப் போர்

இதில், சோவியத் யூனியனும் ஜெர்மனிக்கு எதிராக நேச நாடுகளுடன் இணைந்து போரிட்டது. இந்தக் கடும் போரில் லட்சக்கணக்கான உயிர்கள் மடிந்துகொண்டிருந்த வேளையில் 1945 மே மாதம், ஹிட்லரின் ஜெர்மனி நாஜி படை பிரிட்டனிடம் சரணடைந்ததையடுத்து பெரும்பாலான பகுதிகளில் போர் முடிந்திருந்தது. ஆனால், ஆசியாவில் போர் நீண்டுகொண்டிருந்தது. காரணம், அச்சு நாடுகள் அணியிலிருந்த ஜப்பான். அதனால், ஜப்பான் மீது அணுகுண்டு வீசி போரை முடிவுக்கு கொண்டுவர முடிவெடுத்தது அமெரிக்கா.

இது தொடர்பாக, ஜப்பானிய குடிமக்களிடம் வான்வழித் தாக்குதல்கள் பற்றி எச்சரிக்கப்பட்டதாகவும், ஜப்பான் முழுவதும் 63 மில்லியனுக்கும் அதிகமான துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 08:15 மணியளவில் ஜப்பான் மக்கள் எதிர்பாராத சமயத்தில், அமெரிக்கா எந்தவொரு எச்சரிக்கை அறிவிப்பும் விடுக்காமல், ஹிரோஷிமாவில் (Hiroshima) லிட்டில் பாய் (Little Boy) என்ற பெயரில் முதல் அணுகுண்டை போட்டது. குண்டு விழுந்த வினாடியில் 500 மீட்டர் சுற்றளவில் இருந்த மக்கள் அனைவரும் கனப் பொழுதில் புகையோடு காணாமல் போனார்கள்.ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல்

சுமார் 15,000 டன் டிரைனிட்ரோடோலூயினுக்கு (TNT) சமமான ஆற்றல் வெளியான இந்தப் பேரழிவு தாக்குதலில் 70,000 முதல் 80,000 பேர் அந்தக் கணத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் , அணுகுண்டு தாக்குதலுக்கு முன்னர் ஹிரோஷிமாவில் 90,000 கட்டடங்கள் இருந்த நிலையில், அணுகுண்ட வீசப்பட்ட 1.6 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பரவிய தாக்கத்தால் அவற்றில் 28,000 கட்டடங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. உலகுக்கே இது பெரிய அதிர்ச்சியாக இருக்க, அடுத்த மூன்றாவது நாளே (1945 ஆகஸ்ட் 9) அதற்கு மேலும் இன்னொரு அதிர்ச்சியைத் தரும் வகையில் நாகசாகியில் (Nagasaki) ஃபேட் மேன் (Fat Man) என்ற பெயரில் இரண்டாவது அணுகுண்டை வீசியது.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் ஜப்பான் வேறுவழியில்லாமல், நேச நாடுகள் அணியிடம் சரணடையவே, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. ஆனால், அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்பு, கதிர்வீச்சு பாதிப்பு ஆகியவற்றால் அந்த ஆண்டின் இறுதியில் பலி எண்ணிக்கை மட்டும் 1,40,000-ஆக அதிகரித்தது. குறிப்பாக, அந்த அணுகுண்டு தாக்குதலின் கதிர்வீச்சு பாதிப்புக்குள்ளானவர்களின் சந்ததியினர் தலைமுறை தலைமுறையாக உயிரியல் குறைபாட்டுடன் பிறந்தனர்.அமெரிக்கா - சீனா

இத்தகைய அழிவை ஏற்படுத்திய அமெரிக்காவே போரில் அணுகுண்டைப் பயன்படுத்திய முதலும் , கடைசியுமான நாடு. அமெரிக்காவால், மனித இன வரலாற்றில் நிகழ்ந்த மிக கொடூரமான இந்த சம்பவம், உலகளாவிய ஆயுதக் குறைப்பு மற்றும் அமைதி ஆகிய முயற்சிகளுக்கு வழிவகுத்தது. இதுவே, அணுசக்தி இல்லாத உலகம் என்ற எண்ணத்தை நோக்கி நகரவைத்தது.

காலப்போக்கில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது பற்றிய கவலை ஒரு பெரிய உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்தது. பின்னர், ஒவ்வொரு ஆண்டும் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலுக்கான தினத்தில் அதில் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிப்பதுடன், அமைதியை முன்னெடுப்பதற்காக பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.ஜப்பான்

இயற்கை பேரிடராக இருந்தாலும், மனிதனின் செயற்கை பேரிடராக இருந்தாலும் `மீண்டெழுதல்' என்று சொல்லுக்குப் பெயர்போன ஜப்பானில், இன்று அதே ஹிரோஷிமா மற்றும் நாகசாகி இரண்டும் வளர்ந்த நகரங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. மேலும், அணுகுண்டு தாக்குதலில் இறந்த ஆத்மாக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.``இனி இப்படி நடக்கக் கூடாது..!’’ - ஹிரோஷிமா நாகசாகி கற்றுத் தரும் பாடம் #MyVikatan


http://dlvr.it/TBYjDN

Monday, 5 August 2024

இஸ்ரேல் - ஈரான் மோதல்: போர் மேகம் சூழும் மத்திய கிழக்கு நாடுகளில் நடப்பது என்ன?!

காசா மீதான போருக்கிடையில் பாலஸ்தீன ஆதரவு அமைப்புகளின் தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், ஈரான் மற்றும் அதன் ஆதரவு போராளிக்குழுக்கள் ஒன்றுசேர்ந்து இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க ஆயத்தமாகிவருகின்றன. குறிப்பாக, தன் நாட்டுக்கு விருந்தாளியாக வந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவை வான்வழித்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இஸ்ரேல் மீது கடும் ஆத்திரமடைந்த ஈரான், எந்த நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற போர் பதற்றம் மத்திய கிழக்கு நாடுகளிடையே ஏற்பட்டிருக்கிறது.இஸ்ரேல் கொன்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா

கடந்த கடந்த ஜூலை 30-ம் தேதி ஈரான் புதிய அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியா ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு சென்றார். அங்கு பதவியேற்பு விழாவை முடித்துக்கொண்ட ஹனியா, தான் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அந்தநிலையில், அவர் தங்கியிருந்த அறையின்மீது ஆளில்லா ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் தனது மெய்க்காப்பளருடன் சேர்ந்து இஸ்மாயில் ஹனியாவும் உயிரிழந்தார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு ஆளான ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனி, ``எங்கள் நாட்டுக்கு விருந்தினராக வந்த தலைவரை இஸ்ரேல் கோழைத்தனமாக கொலை செய்திருக்கிறது. அதற்கு கடுமையான பதிலடி நிச்சயம். எங்கள் விருந்தினரை எங்கள் மண்ணில் கொலை செய்ததற்கு பதிலடி கொடுப்பதை எங்கள் கடமையாக நினைக்கிறோம்!" என அதிரடியாக அறிவித்தார்.

அதேநாளில், லெபனானிலிருந்து செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் தளபதி ஃபவுத் ஷுக்கர், இஸ்ரேல் நடத்திய மற்றொரு வான்வழித்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் பெய்ட் ஹில்லெல் நகரில் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. ஆனால், இஸ்ரேலில்ன் பாதுகாப்பு கேடயமான `ஐயர்-டோம்' அமைப்பின் மூலம் அந்த ஏவுகணைகள் வரும்வழியிலேயே தாக்கி அழிக்கப்பட்டன. இருப்பினும் தனது அடுத்தகட்ட தாக்குதலை ஹிஸ்புல்லா எந்நேரமும் தொடங்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இஸ்ரேல் அடுத்தடுத்து நடத்தியதாக சொல்லப்படும் இந்த இரண்டு தாக்குதல்களும் அதன் பரம எதிரிகளான ஈரான் நாடும், லெபானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹைதி, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆகிய அமைப்புகளுக்கும் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பழிக்குப் பழி தீர்ப்பதற்கான எதிரணிகள் ஒன்றிணைந்திருப்பதாகவும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம் என்றும் அமெரிக்கா எச்சரித்திருப்பது மத்திய கிழக்கு நாடுகளிடையே பெரும் பீதியை கிளப்பியிருக்கிறது.ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் தளபதி ஃபவுத் ஷுக்கர்

குறிப்பாக, அமெரிக்க உளவுத்துறை, `ஆகஸ்ட் 5-ம் தேதியிலிருந்து அடுத்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஈரான் போர்த்தொடுக்க வாய்ப்பிருக்கிறது' என எச்சரிச்கை விடுத்திருக்கிறது. இந்தநிலையில், அமெரிக்க ராணுவ ஜெனரல் மைக்கேல் குரில்லா இஸ்ரேல், ஜோர்டான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதேசமயம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், `இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்கா எப்போதும் உறுதுணையாக நிற்கும்' என இஸ்ரேல் பிரதமரிடம் தொலைபேசியின்மூலம் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இஸ்ரேல் பாதுகாப்புக்காக ஓமன் வளைகுடாப் பகுதியில் ஏற்கெனவே முகாமிட்டிருக்கும் அமெரிக்காவின் `தியோடர் ரூஸ்வெல்ட்' விமானம் தாங்கி போர்க்கப்பலும், `ஆபிரகாம் லிங்கன்' போர்க் கப்பலும் தயார்நிலையில் இருக்க பென்டகனால் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், கூடுதலான போர்க்கப்பல்கள், போர்விமானங்களை மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பவும் அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது. அதேபோல, பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இரண்டு போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், போர் ஹெலிகாப்டர்களையும் மத்திய கிழக்கில் தயார் நிலையில் வைத்திருக்கிறது.

மத்திய கிழக்கில் நாளுக்குநாள் இந்த போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதால் இஸ்ரேல், லெபனான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை பாதுகாப்பாக இருக்க வேண்டி, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியிருக்கின்றன. குறிப்பாக லெபனான் நாட்டிலிருக்கும் தங்கள் நாட்டவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியிருக்கின்றன. இந்தநிலையில், இந்தியாவிலிருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவுக்கு செல்லும் ஏர் இந்தியா விமான சேவைகள் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இதேபோல, மற்ற சில நாடுகளும் பதற்றத்துக்குரிய நாடுகளுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்டிருக்கின்றன. இந்த அசாதாரண சூழல் மத்திய கிழக்கில் போர் மூளும் அச்சத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.அமெரிக்க ராணுவ ஜெனரல் மைக்கேல் குரில்லா

இந்த அசாதாரணமாக போர் மேகம் சூழ்வதற்கு அடிப்படைக் காரணம் பாலஸ்தீனம்(காசா) மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்தான். ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 2023 அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர்த்தொடுத்தது. இந்தப் போரில் இதுவரை 40,000 பேர் கொல்லப்பட்டிருகின்றனர். அதில், 39,000 பேர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள். உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தும் காசா மீதான ஆக்கிரமிப்புப் போரை கைவிடாத இஸ்ரேல் `ஹமாஸை' அழித்தொழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது' என்றுகூறி தனது தாக்குதலை தீவிரப்படுத்திவருகிறது. மேலும், தனக்கு இடையூறாக இருக்கும் ஏனைய அமைப்புகளின் தலைவர்களையும் தனது உளவுப்பிரிவான மொசாட் மூலம் குறிவைத்துவருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விமான விபத்தில் உயிரிழந்ததற்குப் பின்னணியிலும் இஸ்ரேல்தான் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்று தனக்கு எதிரிகளாக உள்ள அனைத்து தரப்பின்மீதும் ஒரேநேரத்தில் இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல் நடத்த, அந்த அனைத்து அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து இஸ்ரேல் மீது பழிக்குப்பழி தாக்குதல் நடத்தலாம் என்கிற நிலை ஏற்பட்டுளது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />

http://dlvr.it/TBXsXy

பயணியின் தலையில் பேன்; அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்... என்ன சொல்கிறது American Airlines?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், ஒரு பெண்ணின் தலையில் பேன் இருந்ததால் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக அந்த விமானத்தில் பயணித்த பயணி ஜுடெல்சன் என்பவர் தன் டிக்டாக் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், ``கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க் செல்வதற்காக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டேன். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், இரு பெண்கள், பணிப்பெண்ணை அழைத்து ஏதோ புகார் கூறும் வகையில் பேசினார்கள்.விமானம்

சிறிது நேரத்தில் விமானத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போதுதான் ஒரு பயணியின் தலையில் பேன் இருந்ததும், அதைப் பார்த்த இரண்டு பெண் பயணிகள், பணிப்பெண்ணிடம் கூறியதும், அவர்களும் அதை சோதித்து அறிந்துகொண்டதால் ஏற்பட்ட சலசலப்பு என்பதை அறிந்துகொண்டேன். அதன் பிறகு விமானம் பீனிக்ஸில் தரையிறக்கப்பட்டது. நாங்கள் தங்குவதற்கான ஹோட்டல் அறை தொடர்பான தகவல்கள் எங்கள் இமெயிலுக்கு வரும் எனக் குறிப்பிட்டார்கள்.

12 மணி நேர தாமதத்துக்குப் பிறகு நாங்கள் மீண்டும் நியூயார்க் நகரம் புறப்பட்டோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அமெரிக்க ஏர்லைன்ஸ் அளித்த விளக்க அறிக்கையில், ``ஜூன் 15 அன்று, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 2201, லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க் புறப்பட்டது. அப்போது பயணிக்கு ஏற்பட்ட மருத்துவ அவசரத் தேவை காரணமாக பீனிக்ஸ்க்கு திருப்பி விடப்பட்டது." எனக் குறிப்பிட்டிருக்கிறது.Bangladesh Violence: மீண்டும் வெடித்த வன்முறை; 98 பேர் பலி... வங்க தேசத்தில் பெரும் பதற்றம்!


http://dlvr.it/TBWHj7

``கல்யாணம் பண்ணுங்க, குழந்தை பெறுங்க..” கட்டாயப்படுத்தும் சீன அரசு... ஏன் தெரியுமா?

ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் சீனாவை முந்த முடியாமல் உலக நாடுகள் போராடிக் கொண்டுள்ளன. இன்னொரு புறம் தங்கள் சொந்த நாட்டு மக்களின் மனநிலையைச் சமாளிக்க முடியாமல் சீன அரசு உள்ளுக்குள் போராடிக் கொண்டிருக்கிறது.

பிரச்னை இதுதான்…

சீனர்களுக்கு இப்போது திருமணத்தில் நாட்டமில்லை. அப்படியே திருமணமானாலும் குழந்தை பெற்றுக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. இந்தப் புதிய கலாசாரப் பரவலால் சீனாவில் திருமண விகிதம் வீழ்ச்சியடைந்துகொண்டே உள்ளது. குழந்தைப் பிறப்பு அதைக் காட்டிலும் அதல பாதாளத்தில் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த திருமணத்தின் அவசியம் குறித்த பட்டப்படிப்பை கல்லூரிகளில் தொடங்குவதாக அரசு அறிவித்துள்ளது. சீனா`பிறப்பு விகிதம் அதிகரிக்க ரூ.42,000 கூடுதலாக வழங்கப்படும்' - ஜப்பானிய சுகாதாரத்துறை அமைச்சகம்

சீனாவில் உள்ள Civil affairs university மிகவும் பிரபலமானது. தலைநகரான பீஜிங்கில் அமைந்திருக்கும் பல்கலைக்கழகம் என்பதால் இன்னும் கூடுதல் கவனத்துக்குரிய கல்விநிலையமாகவும் உள்ளது. இங்குதான் திருமணம் தொடர்பான இளநிலை (Undergraduate) படிப்பு அறிமுகமாகவுள்ளது. திருமணம் தொடர்பான கலாசாரம் நாட்டுக்கு எவ்வளவு முக்கியமானது என்பது இதில் பாடத்திட்டமாக இருக்கும். வரும் செப்டம்பரில் இதற்கான வகுப்புகள் தொடங்கவுள்ளன. இந்தப் பட்டப்படிப்பின் மூலம் திருமண விகிதம், குழந்தைப் பிறப்பு விகிதம் இரண்டையும் அதிகரிக்க முடியும் என்ற முயற்சியில் அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.

உலகளவில் மக்கள் தொகையில் முதல் இடம் என்ற பெயரைப் பெற்றிருந்தது சீனா. (கடந்த 2022-ம் ஆண்டு இந்தியா சீனாவை முந்தியது). இதனால் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் வகையில் One-child policy என்கிற ஒரே ஒரு குழந்தை திட்டத்தை 1980-ம் ஆண்டு அரசு கொண்டு வந்தது. அதன் விளைவுகள் விபரீதமாகி குழந்தை பிறப்பு வேகமாகக் குறைந்ததால், விழித்துக் கொண்ட அரசாங்கம் 2016-ம் ஆண்டு அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றது. தம்பதியர் 2 குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், மக்கள் தொகை உயர்ந்தபாடில்லை என்பதால் 2021-ம் ஆண்டு, வீட்டுக்கு 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டது. ஆனாலும், அரசு மகிழ்ச்சியடையுமளவு எதுவும் நடக்கவில்லை.சீனாவில் திருமணம்குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத தென்கொரியப் பெண்கள், கடுமையாகச் சரிந்த பிறப்பு விகிதம்...

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு திருமண விகிதம் 2022-ம் ஆண்டு இன்னும் அதிகமாக வீழ்ச்சியடைந்தது. 2016-ம் ஆண்டில் இருந்த குழந்தைப் பிறப்பு விகிதம், கடந்த 2023-ம் ஆண்டில் பாதியாகவும் குறைந்துள்ளது. ஏற்கெனவே கொரோனாவால் நிறைய மனித வள இழப்பினைச் சந்தித்திருக்கும் சீனாவுக்கு, இது இன்னும் கூடுதல் இழப்பாகியுள்ளது. இதனால்தான் ‘திருமணம், குழந்தைப்பேறு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உண்டாக்க வேண்டியது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்‘ என்று கடந்த ஆண்டு அதிபர் ஜின்பிங் கூறியிருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், குழந்தை பெற்றுக் கொள்கிறவர்களுக்காக பல்வேறு சலுகைகளையும் ஜின் பிங் அரசு அறிவித்தது.

‘பெற்றோருக்கான விடுமுறை திட்டம், தனியார் நிறுவன ஊழியர்களின் குழந்தை வளர்ப்பு தொடர்பாக அந்நிறுவனங்களுக்கு சில உதவிகளைச் செய்வது, மகப்பேறு கால விடுமுறையை பெண்களுக்கு அதிகரிப்பது, வரி விலக்கு சலுகைகள், குடும்பங்களுக்கு மானியம் வழங்குவது என பலவித நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

இந்த முயற்சியின் ஒருகட்டமாகவே திருமணம் தொடர்பான பாடத்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் நேர்மறையான திருமணங்கள் (LGBTQவினருக்கு சலுகைகள் கிடையாது), குடும்ப கலாசாரத்தை மாணவர்களிடம் இந்தப் பட்டப்படிப்பு கற்றுக் கொடுக்கும். மாணவர்களின் வழியே பொதுமக்களுக்கு இந்தக் கருத்துகள் பிரசாரமாகக் கொண்டு செல்லப்படும். குடும்ப நல ஆலோசனை, உயர்தரமான திட்டமிடல், திருமணம் தொடர்பான பொருள்கள் மற்றும் சந்தையை விரிவுபடுத்துதல் இதில் முக்கிய திட்டங்களாக உள்ளன. அரசின் இந்த நடவடிக்கைகள் கேலிப்பேச்சுக்கும் ஆளாகியுள்ளன. ‘திருமணம் தொடர்பாக பட்டப்படிப்பு படிக்கிறவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன வேலை வாய்ப்பு கிடைக்கும்‘ என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் சிலரோ, ‘அரசே கல்யாண தரகர் வேலையைப் பார்க்கப் போகிறதா‘ என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, கொஞ்சம் நுட்பமாக கவனித்தால் இது சீனாவின் பிரச்னை மட்டுமே அல்ல என்பது புரியும். சர்வதேச அளவிலேயே திருமண விகிதங்கள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. திருமண வாழ்க்கை என்றாலே அலர்ஜியும், குழந்தைப்பிறப்பு என்றாலே பயமும் இன்றைய இளம் தலைமுறையினரிடம் உருவாகி வருகிறது. சீனா

வேலை வாய்ப்பின்மை, உத்தரவாதமற்ற பணிச்சூழல், வாழ்க்கை நடத்துவதற்கான செலவுகள் அதிகரிப்பது, கூட்டுக்குடும்பங்கள் ஒழிந்ததால் குழந்தை வளர்ப்பில் இருக்கும் சிரமம், கலவரப்படுத்தும் கல்விக்கட்டணங்கள், சுகாதார செலவுகள் என பல விஷயங்கள் இதைத் தீர்மானிக்கின்றன. முன்பைக் காட்டிலும் அதிகரிக்கும் விவாகரத்துகளும், பார்ட்னர் மீதான அதீத எதிர்பார்ப்புகளும் திருமணம் மீதான நம்பிக்கையை இளைஞர்களிடத்தில் சீர்குலைக்கின்றன. LGBTQ போன்ற நவீன கால கலாசாரங்களும் இதில் பெரிய தாக்கத்தை உண்டாக்குகின்றன.

உதாரணத்துக்கு, 1970 -களோடு ஒப்பிடும்போது அமெரிக்காவில் தற்போது 60 சதவிகிதமளவு திருமணவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்கிறார்கள். மில்லினியல் இளைஞர்களின் திருமண வெறுப்பு மனோபாவத்தை New Normal என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் சீனாவைப் போல எல்லா நாடுகளிலும் இது போன்ற ‘வாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்‘ என்கிற பட்டப்படிப்பு ஆரம்பித்தாலும் ஆச்சர்யமில்லை!சென்னையில் குறையும் மரங்களின் எண்ணிக்கை; ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்!


http://dlvr.it/TBVxqf

Israel - Iran Conflict: `இன்று முதல் இஸ்ரேல் மீது இரான் தாக்குதலை தொடங்கலாம்!'- அமெரிக்கா எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு எதிராக இரானும், ஹிஸ்புல்லாவும் திங்கள்கிழமை (இன்று) முதல் தாக்குதலை தொடங்கலாம் என ஜி7 நாடுகளைச் சேர்ந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் எச்சரித்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே, இரானில் கொலைசெய்யப்பட்டார். இதற்கு பின்னனியில் இஸ்ரேல் இருப்பதாக ஹமாஸ் குற்றம்சாட்டிய நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இருக்கும் இரான், இஸ்ரேல் மீது எதிர்த்தாக்குதலுக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தகவல் வெளியானது.இஸ்மாயில் ஹனியே

இதற்கிடையில், ஹிஸ்புல்லாவின் ராணுவத் தளபதி ஃபுஆத் ஷுக்ர் இஸ்ரேல் ராணுவத்தால் கொலைசெய்யப்பட்டார். இதற்கு பதிலடியாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. ஆனால், அந்த தாக்குதல்கள் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பான டோம் மூலம் முறியடிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. அதே நேரம் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ உதவியை வழங்கியது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்தது.

இந்த நிலையில்தான், போர் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைக்காக ஜி7 நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூட்டினார்.

அதில், ``அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் இஸ்ரேல் மீதான இரானிய தாக்குதல் தொடங்கலாம் என நாங்கள் நம்புகிறோம்." என எச்சரித்துள்ளார். இஸ்ரேலின் முன்னணி நாளிதழான டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல், இஸ்ரேல் மீதான தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கைக்கு மத்தியில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடந்ததாகவும், அதில் இஸ்ரேலின் முன்னணி உளவுத்துறை நிறுவனங்களான மொசாட் தலைவர்கள் டேவிட் பர்னியா, ஷின் பெட் தலைவர் ரோனென் பார், பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட், ஐடிஎஃப் தலைமை அதிகாரி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.இஸ்ரேல் நெதன்யாகு

அந்தக் கூட்டத்தில், இஸ்ரேல் மீது நடத்தப்படவிருக்கும் தாக்குதலைத் தடுக்க, இரான் மீது ஒரு முன்கூட்டிய தாக்குதல் நடத்த அனுமதிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, தற்போதைய சூழ்நிலையின் தீவிரம் காரணமாக இந்தியா உட்பட பல்வேறு தூதரகங்கள் தங்கள் குடிமக்களை லெபனானை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்துகின்றன.Israel - Iran War Tension: ஹிஸ்புல்லா, ஹமாஸ் Vs இஸ்ரேல்; மோசமடையும் சூழல்! - என்ன நடக்கிறது அங்கு?


http://dlvr.it/TBVxZC

Sunday, 4 August 2024

Israel - Iran War Tension: ஹிஸ்புல்லா, ஹமாஸ் Vs இஸ்ரேல்; மோசமடையும் சூழல்! - என்ன நடக்கிறது அங்கு?

இஸ்ரேல் - ஹமாஸ் குழுவுக்கு மத்தியில் நடந்து வரும் போரில், இரானில் ஹமாஸ் குழுவின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இரானின் புரட்சிகர காவலர் படை, இஸ்ரேலை பழிதீர்க்க சபதம் எடுத்துள்ளது. இதற்கிடையில், இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இரானில் இருக்கும் ஹிஸ்புல்லா குழுதான் காரணம் என இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இதை ஹிஸ்புல்லா குழு மறுத்தது. ஆனாலும், அதற்குப் பதிலடி கொடுப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை லெபனானின் தெற்கு பெய்ரூட் நகரில் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் நெதன்யாகு

இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவரான ஃபுஆத் ஷுக்ர் (Fuad Shukr) கொல்லப்பட்டார். இதற்கு எதிர்த் தாக்குதலாக சனிக்கிழமை ஹிஸ்புல்லா இஸ்ரேலின் மோஷவ் பெய்ட் ஹில்லெல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள பொதுமக்கள் காயமடைந்ததாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் ஹிஸ்புல்லாவால் ஏவப்பட்ட பெரும்பாலான ராக்கெட்டுகளை, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பான டோம் அமைப்பு இடைமறித்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேலிய அதிகாரிகள் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் தீ பரவியதாக தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையில், இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா, இஸ்ரேலின் பாதுகாப்பை அதிகரிக்க இஸ்ரேலில் இருக்கும் தனது குடிமக்களை பாதுகாக்கவும், மத்திய கிழக்கில் தனது ராணுவ உதவிகளை அதிகரிப்பதாகவும் கூறியிருக்கிறது.இஸ்ரேல் தாக்குதல்

மேலும், நிலைமை விரைவில் மோசமடையக்கூடும் என்று இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி எச்சரித்ததைத் தொடர்ந்து, லெபனானில் உள்ள அமெரிக்கத் தூதரகம், புதிய போர் ஏற்படும் என்ற அச்சம் இருப்பதால் உடனடியாக அமெரிக்கர்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதே போலவே, ஜோர்டான், கனடா, இந்தியா உட்பட பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு லெபனானை விட்டு விரைவில் வெளியேறுமாறு அறிவுரைகளை வழங்கியுள்ளன.துபாயில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட தமிழக, கேரள பெண்கள் - ஹோட்டல் உரிமையாளர் சிக்கிய பின்னணி


http://dlvr.it/TBT6xJ

Saturday, 3 August 2024

Trump: `அதுவரையில் கமலா ஹாரிஸ் ஆப்ரிக்க அமெரிக்கர் என தெரியாது!' - இன ரீதியாக விமர்சிக்கும் ட்ரம்ப்

அமெரிக்காவில் இன்னும் மூன்று மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இவ்வாறிருக்க தற்போதைய அதிபர் ஜோ பைடனின் சமீபகால தெளிவற்ற மற்றும் தடுமாற்றமான பேச்சு, தளர்வான நடை, உடல்நலம் போன்றவை விமர்சனங்களுக்குள்ளானது. பின்னர், திடீரென ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக ஜோ பைடனுக்கு பதில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் (Kamala Harris) முன்மொழியப்பட்டார்.கமலா ஹாரிஸ்

முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் அதிபராகப்போகிறார் என்று பேச்சுக்கள் எழுந்தன. இருப்பினும், எதிர்முனையில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ஜோ பைடனை விடவும் கமலா ஹாரிஸை தோற்கடிப்பது எளிது என கூறிவருகிறார்.டொனால்ட் ட்ரம்ப்

இருவரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கமலா ஹாரிஸ் குறித்து இன ரீதியாக ட்ரம்ப் பேசியிருப்பது விவாதப்பொருளாகியிருக்கிறது.

சிகாகோவில் நடைபெற்ற தேசிய ஆப்ரிக்க அமெரிக்க பத்திரிகையாளர் சங்க மாநாட்டில் பேசிய ட்ரம்ப், ``நேரடியான பழக்கம் இல்லை என்றாலும், மறைமுகமாக அவரை (கமலா ஹாரிஸ்) நீண்டகாலமாகவே எனக்குத் தெரியும். அவர் இந்திய பாரம்பரியத்தைக் கொண்டவர். மேலும், இந்திய பாரம்பரியத்தை மட்டுமே அவர் ஊக்குவித்துவந்தார். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஆப்ரிக்க அமெரிக்கராக மாறியபோதுதான் அவர் அந்த இனத்தவர் என்று தெரியவந்தது. அதுவரையில் அவர் ஆப்ரிக்க அமெரிக்கர் என்று எனக்குத் தெரியாது.

தற்போது, அவர் தன்னை ஆப்ரிக்க அமெரிக்கராகவே அறியப்பட விரும்புகிறார். இப்போது அவர் இந்தியரா அல்லது ஆப்ரிக்க அமெரிக்கரா என்று எனக்குத் தெரியவில்லை... இங்கு அனைவரையும் நான் மதிக்கிறேன். ஆனால், அவர் வெளிப்படையாக இல்லை. காரணம், முன்பு அனைத்து வழிகளிலும் இந்தியராக இருந்தவர், திடீரென ஆப்ரிக்க அமெரிக்கராக மாறினார்" என்றார்.கமலா ஹாரிஸ்

அதோடு, ட்ரம்ப் தனது Truth சமூக வலைதளப் பக்கத்தில் கமலா ஹாரிஸின் பழைய குடும்ப புகைப்படத்தைப் பதிவிட்டு, ``பல வருடங்களுக்கு முன்பு நீங்கள் அனுப்பிய அருமையான படத்துக்கு நன்றி கமலா... உங்களின் அரவணைப்பு, நட்பு மற்றும் இந்திய பாரம்பர்யத்தின் மீதான உங்களின் அன்பு மிகவும் பாராட்டத்தக்கது" என்று ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

மறுபக்கம், ட்ரம்பின் இன ரீதியான பேச்சுக்கு எதிர்வினையாற்றிய கமலா ஹாரிஸ், ``நம்முடைய வேறுபாடுகள் நம்மைப் பிரிக்காது என்பதை உணர்ந்துகொண்ட தலைவர்தான் நமக்கு தேவை" என்று ஆப்ரிக்க அமெரிக்க பெண்கள் சங்கத்தின் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88ஐ.ஏ.எஸ் தேர்ச்சி ரத்து; முன்ஜாமீன் மனு தள்ளுபடி - பூஜா கேட்கர் துபாய் தப்பி ஓட்டம்?!


http://dlvr.it/TBRPR8

Thursday, 1 August 2024

Ismail Haniyeh: `அகதிகள் முகாம் டு ஹமாஸ் தலைவர்..!’ - இஸ்ரேலின் டார்கெட்டான இஸ்மாயில் ஹனியா யார்?

காசா மீதான இஸ்ரேல் போர்த் தாக்குதலை நிறுத்துவதற்காகவும் போர்நிறுத்ததுக்கான அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காகவும் உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்துவந்த ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா வான்வழித்தாக்குதலில் கொல்லப்பப்பட்டார்.

ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அந்த நாட்டுக்குச் சென்றிருந்த ஹனியாவை, அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்தே வான்வழி தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் இன்னும் பொறுப்பேற்காத நிலையில், தங்கள் நாட்டுக்கு வந்த விருந்தினரை கொலை செய்தற்காக நிச்சயம் இஸ்ரேலைப் பழிவாங்குவோம் என சூளுரைத்திருக்கிறது ஈரான். இதனால் மத்திய கிழக்கு நாடுகளுடையே போர்ப்பதற்றம் இன்னும் தீவிரமாகியிருக்கிறது. இஸ்ரேல் கொன்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா

யார் இந்த இஸ்மாயில் ஹனியா? கொல்லப்பட்டதன் பின்னணி என்ன?

1963-ம் ஆண்டு பாலஸ்தீனத்தின் ஓர் அகதிகள் முகாமில் பிறந்தார் இஸ்மாயில் ஹனியா. தனது சிறுவயது முதலே பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் நடத்திவரும் ராணுவ அடக்குமுறைகளை நேரில் பார்த்து வளர்ந்தவர் என்பதால் இஸ்ரேல் மீதான கோபம் இயல்பாகவே அவர் இளம் ரத்தத்தில் கொதித்தெழுந்தன. அந்த நிலையில், பாலஸ்தீனத்தின் நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதற்கு எதிராக முதன்முறையாக பாலஸ்தீனத்திலிருந்து ஓர் மாபெரும் இஸ்லாமிய கிளர்ச்சி எழுந்தது. அதன்விளைவாக 1987-ம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலிருந்து பாலஸ்தீன - காசா பகுதிகளை விடுவிப்பதற்காகவும், இஸ்ரேலை அழித்தொழிப்பதற்காகவும் அணிதிரண்ட பாலஸ்தீன இளைஞர்கள் `ஹமாஸ்’ என்ற கிளர்ச்சி குழுவை அதிகாரப்பூர்வமாக உருவாக்கினர். அந்த ஹமாஸ் அமைப்பில் தன்னை இணைந்துகொண்ட இஸ்மாயில் ஹனியா மிகக் குறுகிய காலத்திலேயே அமைப்பின் முன்னணி தலைவர்களுள் ஒருவராக உருவெடுத்தார்.

இதனால், இஸ்ரேல் ராணுவத்தால் ஹனியா கைது செய்யப்பட்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதிக்கப்பட்டது. அதன்பிறகு பலமுறை இஸ்ரேல் அரசால் கைதுசெய்யப்பட்டார். குறிப்பாக, 1992-ம் ஆண்டு இஸ்ரேல்-லெபனான் எல்லைப் பகுதில் இருக்கும் மனித நடமாட்டமே இல்லாத பாலைவனப் பகுதிக்கு நாடுகடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டார். பின்னர், தெற்கு லெபனான் பகுதிக்கு நாடுகடத்தப்பட்டு அங்கேயே 6 மாதங்கள் சிறைவைக்கப்பட்டார். ஹனியா மீது இஸ்ரேல் கையாண்டுவந்த தொடர் அடக்குமுறைகள் அவருக்கு ஹமாஸ் அமைப்பினரிடையே செல்வாக்கை உயர்த்தியது. படிப்படியாக அடுத்தடுத்த கட்டங்களுக்குக்கு ஹமாஸ் அமைப்பில் பதவியுயர்வு பெற்றார். அதேசமயம் அதுவரை ஹனியாவை கைது செய்து சிறையிலடைப்பது, நாடுகடத்துவது என்று செய்துவந்த இஸ்ரேல், அவரை முழுவதுமாக தீர்த்துக்கட்ட முடிவெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா

2003-ம் ஆண்டு ஜெருசலேமில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, 2004-ம் ஆண்டில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களான ஷேக் அஹமது யாசின் மற்றும் அப்தெல் அசிஸ் ரன்டிசி உள்ளிட்ட தலைவர்களை அடுத்தடுத்து இஸ்ரேல் கொலை செய்தது. அதேசமயம் ஹனியா மீதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதைதொடர்ந்து 2005-ம் ஆண்டு ஹமாஸின் ரகசியக் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, பாலஸ்தீனம் காசா பகுதில் தேர்தல் நடைபெற அதில் ஹமாஸ் அமைப்பு பெரும்பாலான இடங்களில் பெருவாரியான வெற்றிபெற்றது. இதன்விளைவாக, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் அரசாங்கத்தில், இஸ்மாயில் ஹனியாவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளிலேயே பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் மற்றும் வன்முறைகளால் ஹனியாவின் பிரதமர் பதவி பறிபோனது. இஸ்ரேல் கொன்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா

தொடர்ந்து, 2017-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரானார். ஆயுதக் குழுக்களுடன் தொடர்பில் இருந்துகொண்டே மற்ற நாடுகளுடனான அரசியல் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார். அந்த நிலையில், 2018-ம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் இஸ்மாயில் ஹனியாவை `சர்வதேச பயங்கரவாதி' என்று பிரகடனம் செய்தது. இதனால் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டார் ஹனியா. சில ஆண்டுகள் துருக்கி, சில ஆண்டுகள் கத்தார், ஈரான், காசா என மாறிமாறி தலைமறைவாக வாழ்ந்துவந்தார். இந்தநிலையில்தான், 2023 அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர்த்தொடுத்தது. இந்தப் போரில் இதுவரை 40,000 பேர் கொல்லப்பட்டிருகின்றனர். அதில், 39,000 பேர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தும் காசா மீதான ஆக்கிரமிப்புப் போரை கைவிடாத இஸ்ரேல் `ஹமாஸை' அழித்தொழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது' என்றுகூறி தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. ஆனால் இந்தப் போரை நிறுத்துவதற்காக உலக நாடுகளின் தலைவர்களை ரகசியமாக சந்தித்து வந்தார் ஹனியா.

முதலில் குடும்பம்... அடுத்த ஹனியா:

அந்தநிலையில்தான், கடந்த 2024 ஏப்ரல் மாதம் காசாவில் தங்கியிருந்த இஸ்மாயில் ஹனியாவின் மூன்று மகன்கள் மற்றும் அவரின் நான்கு பேரக்குழந்தைகளையும் இஸ்ரேல் விமானத் தாக்குதலில் உயிரிழந்தனர். அப்போதும்கூட ஹனியா, ``எனது மகன்கள், பேரன்களின் மரணங்கள்... போர் நிறுத்தம் தொடர்பாக நான் மேற்கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளை ஒருபோதும் பாதிக்காது!" என்று உறுதியாகக் கூறினார். தொடர்ந்து, எகிப்து, கத்தார், சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை மறைமுகமாக சந்தித்து போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வலியுறுத்தினார். அந்த நிலையில்தான், ஈரான் புதிய அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு சென்றார். கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 30) பதவியேற்பு விழாவை முடித்துக்கொண்டு, அவர் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட விருந்தினர் மாளிகையில் தனது மெய்க்காப்பாளருடன் தங்கியிருந்தார். அந்தநிலையில்தான், அதிகாலை அவர் தங்கியிருந்த கட்டடத்தின்மீது ஆளில்லா ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் மெய்க்காப்பளருடன் சேர்ந்து இஸ்மாயில் ஹனியாவும் உயிரிழந்தார்.ஈரானில் நடந்த இறுதி ஊர்வலம்

இந்த படுகொலைக்கு ரஷ்யா, துருக்கி, கத்தார், சீனா, பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. அதேசமயம் தங்கள் நாட்டில் வைத்து நடத்தப்பட்ட படுகொலையால் கோபத்தின் உச்சத்துக்கு ஆளாகியிருக்கும் ஈரான், ``எங்கள் நாட்டுக்கு விருந்தினராக வந்த தலைவரை இஸ்ரேல் கோழைத்தனமாக கொலை செய்திருக்கிறது. அதற்கு கடுமையான பதிலடி நிச்சயம். எங்கள் விருந்தினரை எங்கள் மண்ணில் கொலை செய்ததற்கு பதிலடி கொடுப்பதை எங்கள் கடமையாக நினைக்கிறோம்!" என அதிரடியாக அறிவித்திருக்கிறது. இதையடுத்து இஸ்ரேல் - பாலஸ்தீன-காசா போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஈரானும் நேரடியாக களமிறங்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால் உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றம் பற்றிக்கொண்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />

http://dlvr.it/TBNb7L